ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 13ஆம் விலகுவதாக உறுதியளித்த போதும் இன்று இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டு சபாநாயகருக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் நாளை இந்த அறிவிப்பை உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவார். கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் ஜூலை 13ஆம் திகதியிட்டே கையளித்துள்ளார்.
ஆயுதப்படைகளின் பாதுகாப்பிலேயே ஜனாதிபதி கோட்டாபய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் ஜூலை 13 ஆம் திகதி நேற்று கையொப்பமிட்டதாகவும், அதனை நாடாளுமன்ற சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் நாளை அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.