Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டு11 ஊடகவியலாளர்கள் உட்பட 103 பேர் காயம்

11 ஊடகவியலாளர்கள் உட்பட 103 பேர் காயம்

55 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
ஜனாதிபதியை பதவி விலகக் கோரி நேற்று முன்தினம் (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், மேலும் 55 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் 05 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் பலரையும் தாக்கியுள்ளனர்.

அவர்களில், ‘அத தெரண’ மற்றும் ‘சிரச’ செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments