Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுசமையல் எரிவாயு விநியோகப் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

சமையல் எரிவாயு விநியோகப் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

மின்சார பட்டியல் அவசியம் சமையல் எரிவாயு விநியோகம் இன்று ஆரம்பமாகின்றது.

முதல் கட்டமாக கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதே நேரம்,எதிர்வரும் 13 ஆம் தேதி இல் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளில் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என்றும் நேற்று நிறுவனம் தெரிவித்துள்ளது.அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும்.

இதன்மூலம், அதிகளவான எரிவாயு கொள்கலனை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், லிற்றோ நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.இதேவேளை, லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலன் 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 5 கிலோகிராம் மற்றும் 2.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்பதுடன் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படவுள்ளதாக லிற்றோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments