Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக சென்று கொண்டிருந்த 77 பேர் மடக்கிபிடிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக சென்று கொண்டிருந்த 77 பேர் மடக்கிபிடிப்பு

மட்டக்களப்பு கடற்பரப்பில் கைது

மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு இயந்திர படகில் சட்ட விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11) அதிகாலை கடப்படையினர் கைது செய்துள்ளனர்.

இதில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணி அளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியில் இயந்திரப்படகில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவளைத்து கைப்பற்றினர்.

இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைத்து கைது செய்ததை அடுத்து 77 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் படகையும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதுடன் களுவங்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 17 பேரையும் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments