வெளிநாட்டு நாணயத்தாள்களை தமது கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பில் வழங்கப்பட்ட மன்னிப்பு காலம் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக அண்மையில் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்ட அறிவித்தலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணித் திட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் நிதியமைச்சரினால் குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக அதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2022 ஜூலை 05ஆம் திகதிய 2287/16 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள கட்டளையை பார்வையிடுமாறு, இலங்கை மத்திய கேட்டுக் கொண்டுள்ளது.