இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு பஹ்ரைன் மக்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள பஹ்ரைன் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. அத்தோடு, அமைதியின்மை, போராட்டங்கள் உள்ள பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு அதிகாரிகளின் வழிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறும் கேட்டுள்ளது.