Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாட்டில் அமைதியை நிலைநாட்ட முப்படை போலீசாருக்கு ஒத்துழையுங்கள்

நாட்டில் அமைதியை நிலைநாட்ட முப்படை போலீசாருக்கு ஒத்துழையுங்கள்

ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படைகள் மற்றும் போலீசாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானியான ஜெனரல் சவீந்திர சில்வா நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு இன்று காலை அவர் விடுத்துள்ள இந்த அழைப்பு, நாட்டை வளமை நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு எத்தன மாகும்.

நாடு முழுவதும் இருந்து தன்னெழுச்சியாக கொழும்பு மாநகருக்குள் வந்த லட்சக்கணக்கான மக்கள் இன்னும் கொழும்பிலே தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது இன்னும் கொழும்பு மாநகர் உட்பட பல பிரதேசங்களில் பதட்ட நிலை இருப்பதையே காட்டுகின்றது.

மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து தப்பி ஓடினார். அவர் இருக்கும் இடம் இன்னும் தெரியாமலே இருக்கின்றது.

இந்த நிலையில் தான் பாதுகாப்பு படைகளின்j பிரதானி அமைதியை பேணுமாறு சகல மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments