Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகோட்டா, ரணில் உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்

கோட்டா, ரணில் உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்

பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்றும் காலி முகத்திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அரச தலைவர் மற்றும் பிரதமர் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கும் வரை தாமும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம் பெற்ற பாரிய மக்கள் புரட்சியை அடுத்து பிரதமர் ரணில் மற்றும் கோட்டாபயவும் பதவி விலக தயார் என அறிவித்துள்ளார்கள்.

என்றாலும், இவர்கள் இருவரது ராஜினாமா அறிவிப்பையும் நம்ப முடியாமல் இருக்கிறது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தியோகபூர்வமாக இவர்கள் ராஜினாமா செய்த பின்பு தான் போராட்ட நிலைமை தொடர்பில் ஒரு முடிவு கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments