Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பு மாநகரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை

கொழும்பு மாநகரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை

முற்றுகையில் பங்கேற்றோர் தொடர்ந்தும் அதே இடத்தில் போராட்டத்துக்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த மக்கள் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மா ளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலேயே தொடர்ந்தும் தங்கி இருக்கின்றனர்.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பொலிஸாரின் தடைகளை மீறி ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றை முற்றுகையிட்டதோடு, உட்பிரவேசித்தனர். அதே நேரம் நேற்று பிற்பகலில் அலரிமாளிகைக்குள்ளும் சென்றிருந்தனர்.

நேற்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் களனி பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தது.

அவர்கள் கொழும்பு கோட்டை பகுதியில் இரவு முழுவதும் தங்கினர்.இந்தநிலையில் நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்புக்கு சென்றிருந்தனர்.

கொழும்பில் நடந்த முத்திரை போராட்டத்திற்காக நாடு முழுவதும் இருந்து ரயில்கள் மூலமும் விசேட நுரைகள் மூலமும் கொழும்புக்கு வந்த மக்கள், போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கொழும்பில் தங்கி இருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

கொழும்பு மாநகரைப் பொறுத்தளவில், இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும், நிலைமை இயல்புக்கு திரும்பியதாக இல்லை. பொது வாகன போக்குவரத்துக்கள் இல்லை.

கடைகள் பெரும்பாலும் எதுவும் திறக்கப்படவில்லை. சுருங்கைச் சொன்னால் கொழும்புமான விரைவில் தேநீர் அருந்துவதற்கு கூட கடைகள் திறக்கப்படாத ஒரு அவல நிலை காணப்படுகின்றது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments