சகல வாகனங்களும் போராட்டக்காரர்களால் சோதனை கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி தற்போது பதற்றமான நிலை காணப்படுகின்றது.
பெருந்துகையான ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையப் பிரதேசத்தில் திரண்டு நிற்கின்றார்கள்.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருக்கு விமான நிலையத்தினூடாக செல்ல இடமளிக்க மாட்டோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,விமான நிலையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் ஆர்ப்பாட்டக்காரர்களால் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.