Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபிரதமர் பதவியில் இருந்து ரணில்ராஜினாமா செய்யத் தீர்மானம்

பிரதமர் பதவியில் இருந்து ரணில்ராஜினாமா செய்யத் தீர்மானம்

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கு தான் தீர்மானித்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

என்றாலும் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று உருவாகும் வரை தான் அந்த பொறுப்பில் இருந்து சில பணிகளை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வகட்சி அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கூறியுள்ளார்

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments