கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டுமென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தனவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இது அவசரமாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும், சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். உடனடியாகஅதை நியமிக்காவிட்டாலும் பின்னர் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.