Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் மக்கள் தொடர்ந்து போராட்டம்: பாதுகாப்பு தரப்புடன் மக்கள் நேரடி மோதல் (நேரடி...

ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் மக்கள் தொடர்ந்து போராட்டம்: பாதுகாப்பு தரப்புடன் மக்கள் நேரடி மோதல் (நேரடி காணொளி)

பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்கள் தரப்பில் பல பேருக்கு காயம்

கொழும்பு, ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலே மக்கள் திரண்டு விட்டார்கள். அவர்கள் ஜனாதிபதி மாளிகையின் பாதுகாப்பு அரன்களை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கின்ற பொழுது பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகம் செய்து அவர்களை கலைத்து வருகின்றார்கள்.

என்றாலும் திரண்டு இருக்கின்றன மக்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் அதற்கு தொடர்ந்தும் முயன்று வருகின்றார்கள்.

வெளி மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான மக்கள் வாகனங்களிலும் ரயில்களிலும் இன்னும் கொழும்பை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற நிலையில், ஜனாதிபதி மாளிகை ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுவளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என்று தெரிய வந்த நிலையில், போராட்டக்காரர்கள் உன் புகுந்து அதனை தகர்ப்பதற்கும் முயற்சி செய்கின்றார்கள் என்பதே தெரிகிறது.

உண்மையில், ஜனாதிபதி மாளிகைக்குள் இருக்கிறாரா? இல்லையா? என்பது உண்மையாக தெரியவில்லை.

உணவு,நீர்,ஆகாரம் எதுவும் இல்லாமல் அகோர வெயிலுக்கு மத்தியில் மக்கள் ஜனாதிபதியை துரத்துவதற்கான போராட்டத்திலே ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments