ஜனாதிபதி மாளிகைக்குள் பதுங்கி இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, எவ்வாறு தப்பி சென்றார் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
நேற்று காலை வரை ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த கோட்டாபய ராஜபக்ஷ எந்த வளியால் வெளியில் சென்றார் என்பது பெரும் சங்கடமாகவே இருக்கிறது.
விமானம் ஒன்றின் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்றாரா? அல்லது பாதுகாப்பான ராணுவ முகாம் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளாரா? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளின்படி, துபாய் நாட்டுக்கு தப்பிச்சென்று, அங்கிருந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பலாம் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிகிறது.
ராணுவ முகாம் ஒன்றுக்குள்ளும் இவர் மறைந்திருந்து தனது செயல்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடலாம் என்றும் பேசப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் காணொளிகளின் படி, கப்பல் ஒன்றின் மூலம் பொருட்களை அவசர அவசரமாக ஏற்றி தப்பி செல்கின்ற காட்சிகளும் வெளியாகி இருக்கிறது.
இவைகள் அனைத்தும் ஊர்ஜிதம் ஆகாத செய்திகளாகவே தெரிகிறது. என்றாலும், இவர், தப்பிச் சென்றிருப்பது மர்மமாகவே இருக்கிறது.