சஜித் பிரேமதாச புறக்கணிப்பு இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது மாளிகைக்குள் இருந்து தப்பி சென்று இருக்கின்ற நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டம் இப்பொழுது சபாநாயகர் தலைமையில் அவரது உத்தியோபூர்வ வாசஸ்தலத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
என்றாலும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதில் கலந்து கொள்வதில்லை என்று புதிய பூர்வமாக அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பிரதமரும் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு எந்த முடிவும் இதற்கு தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல தப்பி ஓடிய ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓடு தொடர்பு கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. கட்சித் தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.