Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பு,கோட்டை, செத்தாம் வீதி பகுதியில் போலீசார் தொடர்ந்தும் கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பு,கோட்டை, செத்தாம் வீதி பகுதியில் போலீசார் தொடர்ந்தும் கண்ணீர் புகை பிரயோகம்

கொழும்பில் ஜனாதிபதி மாளிகை அமைந்திருக்கின்ற பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களை கலைப்பதற்கு போலீசார் கண்ணீர் புகைப்பிரயோ ங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை நேரப்படி முற்பகல் 10 மணி அளவில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் கடுமையான கண்ணீர் புகை பிரயோகம் செய்தனர்.
கொழும்பு கோட்டை பகுதியால் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்லும் ஒரு வீதியின் பெயர் தான் செத்தாம் வீதியாகும்.

இப்போதைக்கு தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து போராட்டக்காரர்கள் நகர்ந்தாலும், மீண்டும் அந்த இடத்தில் உத்வே கத்தோடு சேர்ந்ததினால், சற்று நேரத்துக்கு முன்னர் இரண்டாவது தடவையாகும் கடுமையான கண்ணீர் புகைப் பிரயோகம் செய்து போராட்டக்காரர்களை சற்று நேரத்துக்கு முன்னர் கலைத்தனர்.

என்றாலும் ஜனாதிபதி மாளிகைக்குள் செல்வதற்கான முயற்சிகளிலே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகளின் வீதி தடைகளையும் உடைத்தெறிந்து உள்ளே செல்வதற்கு தொடர்ந்தும் முயற்சி செய்த வண்ணம் இருக்கின்றார்கள்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments