Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தீப்பந்தம் ஏற்றி ஆர்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தீப்பந்தம் ஏற்றி ஆர்பாட்டம்

(கனகராசா சரவணன்)


கிழக்கு பல்கலைக்கழக  சுதேச வைத்திய பராமரிப்பு பீட மாணவர்கள்; மக்களை ஒடுக்கும் ஊழல் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு தீப்பந்தம் ஏற்றி ஆர்ப்பட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள  சுதேச வைத்திய பீட மாணவர்களின் விடுதிக்கு முன்னால் நேற்று மாலை 6 மணிக்கு ஒன்று திரண்ட நூற்றுக்கு மேற்பட்ட மருத்துவ பீட மாணவர்கள். மாணவர்களின் எதிர்காலத்தை பெறுப்பேற்றுவது யார்?

கோட்ட வீட்டுக்கு போ, அராஜக ஆட்சியை நிறுத்து, பாடசாலைகளை உடன் திற  போன்ற அரசுக்கு எதிரான பல்வேறு  சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்ட ஊர்வலமாக ஆரம்பித்து அங்கிருந்து 
கொழும்பு திருகோணமலை பிரதான வீதி ஊடாக 4 கிலோ மீற்றர் தூரம் உள்ள மட்டக்களப்பு நகர் பொலிஸ் நிலைய வீதி சுற்றுவட்டத்தை சென்று அங்கு தீப்பந்தம் ஏற்றி கோசங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் இரவு 7 30 மணிவரை ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments