Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு மாநகருக்குள் வருகை

இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு மாநகருக்குள் வருகை

படைகள் குவிக்கப்பட்ட நிலையில் பெரும் பதட்டம்

ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து வேறு இடத்துக்கு ஜனாதிபதி மாற்றப்பட்டதாக தகவல்

ஜனாதிபதியின் மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றார் என்ற செய்தி பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளியேற்றும் போராட்டம் நாடு முழுவதும் இப்பொழுது ஆரம்பமாகி இருக்கின்றது.

ஜனாதிபதி மாளிகை அமைந்திருக்கின்ற இலங்கையின் மேல் மாகாணத்தில்,நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 8 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த வேளையில்,கோடாபய ராஜபக்சவை பாதுகாப்பான ஒரு இடத்துக்கு பாதுகாப்பு படையினர் அழைத்துச் சென்று விட்டார்கள் என்று தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்ற பௌத்தப்பிக்குகளும் தெரிவிக்கின்றனர். அவர் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்று இருந்தாலும்,அவரை வெளியேற்றும் போராட்டம் தொடரும் என்ற ஆவேசத்தோடு மக்கள் கொழும்பு மாநகருக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நீர் கொழும்பு, ராகம, ஜா-எல,காலி, பாணந்துறை, கண்டி, உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற பாத யாத்திரை கொழும்பு மாநகரை நோக்கி இப்பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை வெளியேறக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஆவே சத்தோடு கொழும்பை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி,சகல மக்களையும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன் கூடுமாறு அழைப்பு விடுத்து இருக்கிறது. இதற்கு அமைய, கோஷங்கள் எழுப்பியவாறு வந்து கொண்டிருக்கும் மக்கள், கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் திரள ஆரம்பித்திருக்கின்றார்கள்.

நண்பகல் அளவில் இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு மாநகரை முற்றுகை இடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ராணுவத்தினரும் போலீசாரும் விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையிலே, ஜனாதிபதியையும் பிரதமரையும் வெளியேற்றும் போராட்டத்தில், மிகவும் ஆவேசத்தோடு இந்த மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாவை வெளியேற்றும் இறுதி கட்டப் போராட்டம் இன்று ஆரம்பமாகிறது என்றே அரசியல் கட்சிகளினாலும் தொழிற்சங்கங்களினாலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,பொதுமக்கள் பெரும ளவில் கலந்து கொண்டு இருந்தாலும்,பௌத்தபிக்குகளும் பெருந்திரளானோர் பங்கு பெற்றிருக்கின்றார்கள்.
கொழும்பு புறக்கோட்டை நகரிலே பெளத்த பிக்குகளினால் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம், இப்பொழுதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

என்றாலும், கோட்டாவை வெளியேற்றும் போராட்டத்தில் நீராகாரமும் இல்லாமல் அவர்கள் சத்யா கிரகத்தில் ஈடுபட்டிருப்பது பௌத்த மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில், ஜனாதிபதி மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான இடமொன்றுக் கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. அவரை பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்ற வகையிலேயே நேற்று இரவு 9 மணியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தெரிவிக்கின்றார்.

” ஓடி ஒழிக்காமல் மக்கள் போராட்டத்திற்கு தலைவணங்கி பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இவ்வளவு காலமும் பதவியில் இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே இனிமேலும் மக்களுக்காக எதனையும் சாதிக்கப் போவதில்லை. கௌரவமாக வெளியேறி செல்.அல்லது நாம் வெளியேற்றுவோம் ” என மாணவர்கள் கோஷம் எழுப்புகின்றனர்.

இதே போல, காலிமுகத்திடல் போராட்ட களமும் மிகவும் சூடு பிடித்திருக்கிறது.92 ஆவது நாளாக காலி முகத்திடல் போராட்ட களத்தில் ஈடுபடும் இளைஞர்,யுவதிகளுக்கு புது உத்வேகம் பிறந்திருக்கிறது.

இந்த நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கின்றார்கள். ஜனாதிபதி கோட்டாவை வெளியேற்றும் போராட்டமாக இதுவரை இருந்து வந்த போராட்டம், இன்று ரணிலையும் சேர்த்து வெளியேற்றுவதற்கான கோஷங்களோடு, கொழும்பை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments