இன்று திட்டமிடப்பட்டுள்ள பாரியளவிலான அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை கிரிக்கட் ஜாம்பவான் ரொஷான் மஹாநாம, பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், “எமது சொந்த வாழ்வுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் இன்று ஜூலை 9 ஆம் திகதி திட்டமிடப்பட்ட வன்முறையற்ற போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களையும் அவர்களின் இன மற்றும் மத வேறுபாடுகளின்றி நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.