காலி, மாகல்ல பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் இரு பிரதான சந்தேகநபர்கள் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
காலி, மாகால்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஹபராதுவ, வஞ்சாவல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
எரிபொருளுக்காக வாகனத்துடன் வரிசையில் நின்றிருந்த வேளையில் வரிசையில் இடைவெளி இருந்த இடத்தில் வாகனமொன்றை செலுத்த முற்பட்ட நபர் தொடர்பில் எழுந்த பிரச்சினையில், அங்கு வரிசையில் நின்றிருந்தத நபர் மீது குறித்த நபர் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது அண்ணன் மீது ஏன் தாக்கினீர்கள் என குறித்த இளைஞன் வாய்த்தர்கத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த வரிசைக்கு வந்த நபர், தொலைபேசியில் அழைப்பு விடுத்து மேலும் சிலரை அங்கு வரவழைத்துள்ளார்.
அங்கு கூரிய ஆயுதங்களுடன் வந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த இளைஞன் காயமடைந்து, கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர் அச்சல சாலிந்த எனும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கற்கையை நிறைவு செய்த இளைஞனாவார்.