Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபொதுப் பயன்பாட்டு ஆணைக் குழு தலைவரின் கருத்து பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது: அமைச்சர் கஞ்சன

பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழு தலைவரின் கருத்து பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது: அமைச்சர் கஞ்சன

எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோப் குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்த விசாரணைக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரையும் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாட்டில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 200 ரூபாவுக்கும் குறைவாக வழங்க முடியுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கோப் குழுவில் முன்னிலையாகி கருத்து தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கருத்து கூறிய அமைச்சர் கஞ்சன விஜயசேகர, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் கருத்து, பொதுமக்களுக்கு தவறான விளக்கத்தை கொடுத்துள்ளது.
ஆகவே இது சம்பந்தமாக முழுமையான விசாரணையும் விளக்கங்களும் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments