Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாளை -09 - மின்வெட்டு: 2 கட்டங்களில் 3 மணி நேரம்

நாளை -09 – மின்வெட்டு: 2 கட்டங்களில் 3 மணி நேரம்

நாளை சனிக்கிழமை (09) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான  அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பகல் வேளையில் ஜூலை 09, 10, 13 (சனி, ஞாயிறு, பெளர்ணமி தினத்தில்) பி.ப. 1.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11, 11, 14, 15 ஆகிய தினங்களில் மு.ப. 10.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர வர்த்தக வலயத்திற்கு (CC) காலை 6.00 மணி முதல் மு.ப. 8.30 மணி வரையில் 2 ½ மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

(ஜூலை 09, 10, 13 தவிர்ந்த தினங்களில்)
முதலீட்டு வர்த்தக சபை (BOI) கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் மு.ப. 8.30 மணி வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

(ஜூலை 09, 10, 13 தவிர்ந்த தினங்களில்)
அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், ஜூலை 09, 10, 13: 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 – மு.ப. 10.00 – பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
 – பி.ப. 6.00 – பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

ஜூலை 11, 12, 14, 15: 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 – பி.ப. 1.00 – பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
 – பி.ப. 6.00 – பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்
MNO | XYZ : 
 – மு.ப. 5.30 – பி.ப. 8.30 வரை 3 மணித்தியாலங்கள்
CC : 
 – மு.ப. 6.00 – பி.ப. 8.30 வரை 2 1/2மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments