Tuesday, 9 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஎரிபொருள் விலை : சர்ச்சையைஏற்படுத்தி இருக்கும் ஜனக்க ரத்நாயக்கவின் கருத்து (காணொளி இணைப்பு)

எரிபொருள் விலை : சர்ச்சையைஏற்படுத்தி இருக்கும் ஜனக்க ரத்நாயக்கவின் கருத்து (காணொளி இணைப்பு)

கோப் குழு முன்னிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணை குழுவின் தலைவர் ஜனக ரத் நாயக்க தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

பாராளுமன்ற கோப்குழு முன்னிலையில் ஆஜரான பொதுப் பயன்பாடுகள் ஆணை குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, எரிபொருட்களின் விலையை 250 ரூபாவுக்குள் மட்டுப்படுத்தி வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இன்று நாட்டின் முக்கிய பேசு பொருளாகவும் வாழ்க்கையின் இயக்கத்துக்கு செயல்படுகின்ற ஒரு முக்கிய பொருளாக இருக்கின்ற நிலையில், பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் கருத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

” எரிபொருள் இறக்குமதியின் போது பயன்படுத்தப்படுகின்ற விலை சூத்திரம் தவறான தகவலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முறையான புள்ளி விவரங்கள் இல்லாமல் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு கிடைத்திருக்கின்ற புள்ளி தகவலின் படி, எரிபொருட்களின் விலையை 180 ரூபாவுக்கும் 250 ரூபாவுக்கும் இடையில் விற்பனை செய்ய முடியும் ” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மீண்டும் அவர் கோப் குழுவுக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நேரம் அமைச்சர் கஞ்சனவிஜய சேகர, இது தொடர்பாக தன்னையும் பெட்ரோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனக ரத்நாயக்க வின் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என்றும், மக்களை தவறாக வழிநடத்தக் கூடிய கருத்து என்றும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments