இலங்கைக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய நாட்டில் இருந்து எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இலங்கை வந்துள்ளார்கள்.
இவர்கள் இருவரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் , ரஷ்ய ஜனாதிபதி பிளாட்டிமிர் புட்டினும் நேற்று தொலைபேசி மூலம் உரையாடியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்தத் தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு எரிபொருள் வழங்கி உதவுமாறு ரஷ்ய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
விடுத்திருந்தார்.
இந்த உத்தியோகபூர்வ நகர்வை தொடர்ந்தே இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் இலங்கை வந்துள்ளார்கள் என்று நம்ப முடிகின்றது.