டொலரில் எரிபொருளை கொள்வனவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் முடிவு செய்துள்ளது.
டொலரில் எரிபொருள்களை கொள்வனவு செய்ய விரும்புவர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்துள்ளது.