கொழும்பு-கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் நாளையும் நாளை மறு தினமும் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை இடைநிறுத்துவதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதே நேரம்,குறித்த திகதிகளில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.