ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொழும்பு கரையோர போலீஸ் நிலையத்தில் விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இவரது கைது தொடர்பாக சற்று நேரத்திற்கு முன்னர் அரசடி செல்வா பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
” இந்த நாடு இன்னும் ஜனநாயக நாடாகவே இருக்கின்றது. ஹிருணிகா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். இந்த நாட்டு ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அவர் ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றார்.
ஜனநாயக ரீதியான போராட்டத்தை அச்சுறுத்தி தடுப்பதற்கு எடுக்கின்ற முயற்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் ” என ஹர்ஷ டீ சில்வா பாராளுமன்றத்தில் கூறினார்.