விமான சேவை அமைச்சுக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (05) நாடாளுமன்றின் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதற்கமைய, குறித்த விசாரணைகள் நிறைவடையும் வரையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக நிமல் சிறிபால டி சில்வா விலகியிருப்பார் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.