Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுவடக்கு, கிழக்கில் 95% ஆன கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கு, கிழக்கில் 95% ஆன கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

** 14 சதுர கிலோ மீற்றர் பகுதி மாத்திரமே எஞ்சி உள்ளது

**2028 இற்கு முன் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கை

வடக்கு கிழக்கு பகுதிகளில் 95% ஆன நிலப் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய கண்ணிவெடிகள் பற்றிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மேலும் 14 சதுர கிலோ மீற்றர் நிலப் பகுதி மாத்திரமே மீதமாக உள்ளதோடு, 2028 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலக் கண்ணிவெடி அற்ற நாடாக இலங்கையை மாற்றுவது அரசாங்கத்தின் இலக்காகும்


இலங்கையில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றுவது சம்பந்தமாக தெளிவூட்டுவதற்காக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கண்ணிவெடிகள் பற்றிய செயற்பாட்டு நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது

இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்தி இலங்கையை கண்ணிவெடிகள் அற்ற நாடாக விரைவில் மாற்றும் வகையில் தற்போது பெறப்படும் உதவித் தொகயை 21 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஜெனீவாவில் உள்ள சர்வதேச கண்ணிவெடிகள் அகற்றுவதற்கான நிலையம் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றது.

நாட்டில் இடம்பெற்ற யுத்த பயங்கரவாத காலப் பகுதிகளில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கண்ணிவெடிகள் பரவலாக புதைக்கப்பட்டிருந்ததோடு, 2009 ஆம் அண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அவற்றை அகற்றும்  வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அது தேசிய நிலக் கண்ணிவெடிகள் தொடர்பான செயற்பாட்டு மத்திய நிலையத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த மத்திய நிலையம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. நிலக் கண்ணிவெடி அகற்றப்படும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற சகல அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல்களும் இம்மத்திய நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் நிலக் கண்ணிவெடி அகற்றும் செயற்திட்டத்திற்காக இலங்கை இராணுவம் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றது. அதற்கு மேலதிகமாக மெக் நிறுவனம், ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம், டேஸ் நிறுவனம் மற்றும் ஷாப் நிறுவனம் ஆகியன சர்வதேச மற்றும் உள்நாட்டு  அரச சார்பற்ற நிறுவனங்கள் நான்கும் அதற்கான பங்களிப்பை வழங்குகின்றன.
இதற்காக வருடாந்தம் 17 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை கிடைக்கிறது. நிலக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற 300 இற்கும் மேற்பட்ட சிவில்  பொதுமக்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டிலே முழுமையாகத் தங்கி வாழ்கின்ற 12,000 பேருக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலக் கண்ணிவெடிகள் தடை செய்யும் உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. அதன் படி அதனை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலின் கீழ் 2022 பெப்ரவரி 17 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இது தொடர்பான செயலமர்வில் தேசிய நிலக் கண்ணிவெடிகள் பற்றிய செயற்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் கீர்த்தி ரஞ்சித் அபேசிறிவர்தன, அந்நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் வீ. பிரேமசந்திரன், இராணுவ அதிகாரிகள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments