மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உடனடியாக 10 இலட்சம் லிட்டர் டீசலை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
சற்று நேரத்துக்கு முன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை ஆரம்பமாகிவிட்டது. இலட்சக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்கு தயாராகி விட்டன. டீசல் இல்லாததால் இப்பொழுது அது பாதிப்படைந்துள்ளது என்றும் சந்திரகாந்தன் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு வழங்காமல் விட்டால் மக்கள் கல்லால் எறிகின்ற நிலை தான் ஏற்படும்.
பாராளுமன்றத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றி பேசாமல் சட்டத்தைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சுட்டிக்காட்டினார்.