ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ பதவி விலக வலியுறுத்தி கொழும்பு மாநகரில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி பாரிய போராட்டம் நடத்தப்பட இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி எம் பி ராஜித சேனாரத்தின பாராளுமன்றத்தில் கூறினார்.
நாட்டிலுள்ள சகல தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களையும் அழைத்துள்ளது.
சகல மக்களும் ஒன்பதாம் திகதி கொழும்பில் ஒன்று திரளுமாறு தான் அழைப்பு விடுப்பதாகவும் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.
ஒன்பதாம் திகதி ஆரம்பமாகும் இந்த போராட்டம், கோட்டா பதவியில் இருந்து இராஜினாமா செய்து வெளியேறும் வரை தொடரும் என்றும் ராஜித சேனாரத்தின தெரிவித்தார்.
ஜனாதிபதியை விரட்டும் இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.