Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் குச்சவெளி கடலில் கைது

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் குச்சவெளி கடலில் கைது

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை – குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன்,20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது குச்சவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments