Friday, 9 December, 2022
yaraglobal
HomeUncategorizedவரி அறவீடுகளில் சிரமம்; கெசினோ தொழில் சட்டத்தை திருத்த முடிவு

வரி அறவீடுகளில் சிரமம்; கெசினோ தொழில் சட்டத்தை திருத்த முடிவு

தற்போது சீட்டாட்டத் தொழிலை மேற்கொண்டு செல்கின்ற நிறுவனங்களிடமிருந்து முறையான வகையில் குறித்த வரி அறவீடுகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. அதனால், அவ்வாறான வியாபாரங்களை  ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் அரசால் அறவிடப்பட வேண்டிய குறித்த வரியை அறவிடும் நோக்கில் பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின் கீழ் பொருத்தமான திருத்தங்களை அறிமுகஞ் செய்வதற்கும் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் கட்டளைகளை விதிப்பதற்கும், 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின் மூலம் இலங்கையில் சீட்டாட்டத் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இலங்கையில் சீட்டாட்டத் தொழிலை மேற்கொண்டு செல்வதற்காக உரிமங்கள் வழங்கப்பட வேண்டியிருப்பினும், குறித்த சட்டத்தின் ஒழுங்கேற்பாடுகளை வலுவாக்கம் செய்வதற்கான கட்டளைகள் இதுவரை பிறப்பிக்கப்படாமையால், இதுவரை எந்தவொரு சீட்டாட்டத் தொழிலுக்கு குறித்த சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments