(கனகராசா சரவணன்)
ஏறாவூரில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம்,வீடு உறவினரின் வீடு, ஹோட்டல். கடை தீவைப்பு மற்றும் ஆடைத்தொழிற்சாலை உடைத்து சோதப்படுத்திய சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை (04) 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து இதுவரை 38 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார் .
கடந்த மே மாதம் (10) இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம்,வீடு அவரது உறவினரின் வீடு,ஹோட்டல்,கடை என்பன தீக்கிரையாக்கியதுடன் 3 ஆடைத் தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து 16 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட இதுவரை 38 பேரை கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இதில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட 28 பேர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் ஏனைய 9 பேர் தொடர்ந்து விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர் விசாரணையில் நாளாந்தம் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.