Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபொலிஸ் நிர்வகிக்க வேண்டியதை இராணுவத்தை ஈடுபடுத்துவது பொருத்தமல்ல|| சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

பொலிஸ் நிர்வகிக்க வேண்டியதை இராணுவத்தை ஈடுபடுத்துவது பொருத்தமல்ல|| சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுடன் படைத்தரப்பினர் மோதிக்கொள்வதை தவிர்க்கும் வகையில், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


எரிபொருள் நிலையங்களில் – பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் புரிந்து கொள்வது அவசியம். அதேநேரம் பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மிகவும் கடினமான சூழ்நிலையில் செயற்படுகின்றனர்.
எனினும், பொதுமக்களுடன் வன்முறையை தவிர்த்து மிகவும் நிதானத்துடன் செயற்படுமாறு பொலிஸாருக்கும் படையினருக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்குவது அவசியமாகும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கான தமது கடிதத்தில் கோரியுள்ளது.

இலங்கையின் பொலிஸாரினால் முக்கியமாக நிர்வகிக்கப்பட வேண்டிய விடயங்களில், படையினரை ஈடுபடுத்துவது பொருத்தமானதல்ல என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் காலியில் மேற்கொள்ளப்பட்டதை போன்று, அமைதியான போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது தடுக்கவோ ஆயுதப் படைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments