Friday, 12 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபுலனாய்வுத் துறையை பயன்படுத்தி எரிபொருள் மாபியாக்களை கைது செய்யுங்கள்: சபையில் செல்வம் அடைக்கலநாதன்

புலனாய்வுத் துறையை பயன்படுத்தி எரிபொருள் மாபியாக்களை கைது செய்யுங்கள்: சபையில் செல்வம் அடைக்கலநாதன்

எரிபொருட்களை சிப்பெட்கோ நிறுவனங்களில் இருந்து கொள்வனவு செய்து திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மாபியாக்களை கைது செய்ய வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் கோரிக்கை விடுத்தார்.


பாராளுமன்றத்தில் சற்று நேரத்துக்கு முன் உரையாற்றியவர் மேலும் கூறுகையில் ;
முப்படைகளிலும் உள்ள புலனாய்வுத் துறைகளை இதற்குப் பயன்படுத்தி இந்த எரிபொருள் மாபியாக்களை உடனடியாக கைது செய்து மக்களை பாதுகாக்க வேண்டும்.
எரிபொருளை கொள்வனவு செய்து கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். இந்த நிலையால் மக்கள் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


மன்னார் மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றார்கள். மண்ணெண்ணெய் அவர்களுக்கு கிடைப்பதே இல்லை. தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கூடுதலான பவுசர்கள் எரிபொருளை கொண்டு வருகின்றன. கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மிகவும் குறைவான எரிபொருள்களே அனுப்பப்படுகின்றன. தயவு செய்து இந்த நிலையை ஏற்படுத்தாதீர்கள்.
புலம்பெயர் தமிழர்கள் இங்கு முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றார்கள். ஆனால், அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இனவாதமாக பார்க்காமல் யதார்த்தத்தோடு பார்த்து நாட்டு நிலைமையை சீர் செய்ய முயற்சி செய்யுங்கள்.
கட்டார் அரசு சார்பற்ற நிறுவனத்தின் செயல்பாடுகளின் தடை நீக்கப்பட்டிருக்கிறது. அது பரவாயில்லை. அதேபோல,புலம்பெயர் அமைப்புக்களுக்கு விதித்துள்ள தடைகளையும் நீக்கி நாட்டுக்கு முதலீட்டை வரவழையுங்கள்.
கரும்புலிகள் தினத்தில் புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று ஒரு புருடா விடப்படுகிறது. இது ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்புகின்ற ஒரு முயற்சியாகவே பார்க்கிறேன். இனிமேல் புலிகள் மீள் உருவாக்கம் என்பது ஜனநாயக ரீதியான செயல்பாடாகவே இருக்கும்.
ஆகவே நெருக்கடி நிலையில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் அதே நேரம், எரிபொருள் மாபியாக்களை கட்டுப்படுத்த புலனாய்வுத் துறை மூலம் நடவடிக்கை எடுங்கள். என செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றினார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments