தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணங்களைத் தவிர இதர பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆலோசனையானது இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக விமானப் போக்குவரத்துக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகள் பாதிப்படைந்துள்ளன.
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளாந்தம் மின்வெட்டு ஏற்படுகிறது. எரிபொருளுக்காக மக்கள் பல மணிநேரம் வரிசையில் காதிருக்கின்றனர். அத்தோடு போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. வீதிமறியல் மற்றும் அமைதியின்மை என் பன முன்னறிவிப்பின்றி இடம்பெறுவதாகவும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.