Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபாராளுமன்றத்தில் அமைதியின்மை: ஜனாதிபதி ஆசனத்தில் இருக்கும்போதே "Gota Gohome "கோஷம்

பாராளுமன்றத்தில் அமைதியின்மை: ஜனாதிபதி ஆசனத்தில் இருக்கும்போதே “Gota Gohome “கோஷம்


** கோஷங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி சிரிப்புடன் அமர்ந்திருந்தார்

** சபை 10 நிமிடங்கள் ஒத்தி வைப்பு

பாராளுமன்றத்தில் சற்று நேரத்துக்கு முன் அமைதியின்மை ஏற்பட்டது. ஜனாதிபதி சபையில் இருந்து கொண்டிருக்கும்போது, எதிரணியினர் ஜனாதிபதிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
Gota Gohome… Gota Gohome… தொடர்ச்சியாக எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த வேளையில் ஜனாதிபதி சிரித்துக்கொண்டே சபையில் அமர்ந்திருந்தார். அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஏதோ அவரோடு உரையாடிக்கொண்டார். என்றாலும் ஜனாதிபதி ஆசனத்தில் இருந்து எழுந்து செல்லவும் இல்லை. ஆத்திரப்பட்டதாகவும் தெரியவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நிலை தொடர்பாக விளக்கமளித்துக் கொண்டிருந்தபோதே சபையில் இந்த அமைதியின்மை ஏற்பட்டது. இந்தக் கோஷத்துக்கு மத்தியிலும் பிரதமர் தனது உரையை தொடர்ந்தார்.
பிரதமர் தனது உரையை முடித்துக் கொண்டதும் சபாநாயகர் சபையை 10 நிமிடங்கள் ஒத்தி வைத்தார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments