Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை; வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை

பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை; வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை

** பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

ஜூலை 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் தொடர்பில்  பொதுமக்கள் வீணாக குழப்பமடைய வேண்டாம் என்றும், தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்லுமாறும்  பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
கிடைக்கப்பட்டுள்ள ஆதாரமற்ற புலனாய்வு தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. 
‘கறுப்பு ஜூலையை’ நினைவுகூரும் வகையில், இம்மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று குறிப்பிட்டு புலனாய்வு வட்டாரங்கள் மூலம் கிடைக்கப் பெற்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது உறுதிப்படுத்தப்படாத புலனாய்வுத் தகவல் ஆகும்.
மேலும் ‘கறுப்பு ஜூலை’யைத் தொடர்புபடுத்தி இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்புடைய அடிப்படை தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கபெற்றில்லை .
இந்த தாக்குதல் பயங்கரவாதக் குழுக்களால் நடத்தப்படலாம் என்றும், அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அல்லது நிலைகுலையச் செய்ய அரச எதிர்ப்பு குழுக்களால் நாட்டில் வன்செயல்களை உருவாக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கிடைக்கப்பெற்ற மேற்படி புலனாய்வு தகவல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேசமயம் பொது மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி உச்சக்கட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த  தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பொதுமக்கள் வீணாக குழப்பமடைய வேண்டாம், எனவும், தமது அன்றாட நடவடிக்கைகளை அச்சமின்றி முன்னெடுத்துச் செல்லுமாறும்  பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

பொலிஸ் மாஅதிபரினால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கு எழுதப்பட்டதாக தெரிவிக்கப்படும் கடிதத்தின் பிரதி

‘ 2022 ஜுலை 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நினைவுகூரப்படவுள்ள கரும்புலிகள் தினத்தில் வடக்கு, கிழக்கு அல்லது தென்மாகாணத்தை இலக்குவைத்து குண்டுத்தாக்குதல் அல்லது ஏதோவொரு நாசகார செயலொன்று வெளிநாட்டு உளவுச்சேவை ஒன்றின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
அவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ள நாசகார செயலுக்கான பொறுப்பை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது சுமத்தவும் ஆயத்தங்கள் உள்ளதாக அறியமுடிகின்றது. தற்போதும் யாழ் பிரதேசத்தில் வெளிநாட்டு நிறுவனங்களில் சேவையாற்றுபவர்கள் மற்றும் பிரபுக்களுக்கு எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்கவேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாதத்தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவின் உளவுப்பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் (64975) தாஸ் குப்தாவுக்கு அவரது தனிப்பட்ட ஒற்றர் தகவல் அளித்துள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை இலக்குவைத்து அவர்களுக்கும் அவர்களது வீடுகள்மீதும் தாக்குதலை முன்னெடுத்து அவர்கள் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகித்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உட்படுத்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் இடதுசாரிக்கட்சிகள், எதிர்க்கட்சியின் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments