**சஜித் – ரணில் சபையில் நேருக்கு நேர் சவால்
சத்தம் போட்டும் கூக்குரல் எழுப்பியும் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பதை இன்றைய எதிர்க்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான எதிர்க்கட்சி இதுதான் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரேமதாச சபையில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்டு பேசிய பிரதமர் இதனை தெரிவித்தார்.
ஆட்சியை எப்படி கைப்பற்றுவது எப்படி என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை, என்னிடம் கற்றதை அவர்களுக்கு செயற்படுத்த தெரியவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அத்தோடு, தன்னிடம் மீண்டும் வந்தால் மீண்டும் கற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஒன்றை மறந்துவிட்டார், அவர் தனது தந்தையான ரணசிங்க பிரேமதாசவிடம் அரசியல் கற்றதை மறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இன்று அவர் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்துவிட்டார்.ஆனால் மக்கள் அவருக்கு நல்லதொரு பாடத்தை புகட்டிவிட்டனர். அதுதான் ஒரு ஆசனத்தை கூட வழங்கவில்லை. தேசிய பட்டியலில் வந்துவிட்டு அவர் எங்களுக்கு பாடம் புகட்டுவதாக தெரிவிக்கிறார்.
நான் அவருக்கு விரைவில் பாடமொன்றை புகட்டுகிறேன். அப்போது தெரியும் நாங்கள் யார் என்பதை.முழு நாடும் இன்று பாதாளத்திற்குள் வீழ்ந்துவிட்டது. இப்போது எதற்கும் தீர்வு வழங்காமல் வெறும் வார்த்கைகளை மாத்திரம் தெரிவித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டார்.