குருநாகல், யக்கஹபிட்டிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி பரிந்துரைகளை வழங்க
ஐவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.