Friday, 12 August, 2022
yaraglobal
HomeUncategorizedஅமைச்சரவைக் கூட்டத்தில் 17 தீர்மானங்கள்

அமைச்சரவைக் கூட்டத்தில் 17 தீர்மானங்கள்

இலங்கை விமானப்படை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை மூலம் மட்டக்களப்பு விமான நிலையம் உள்ளூர் விமானப் பயண நிலையமாக 2018 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டிருப்பினும், விமானங்கள் தரையிறக்கம் மற்றும் தரித்து வைத்தல் போன்ற கட்டணங்கள் குறித்த விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டுள்ளமையால் தற்போது எவ்வித வருமானங்களையும் ஈட்டுவதில்லை.
இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு குறித்த விமான நிலையத்தின் இடவசதிகளை வேறு பயனுள்ள செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவ்விமான நிலையத்தில் விமானப் பயிற்சி நிறுவனமொன்றை நிறுவுவதற்காக போட்டி விலைமனு அடிப்படையில் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவை உருவாக்கல்
    வாழ்க்கைச் செலவை நிலையாகப் பேணுவதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும் மற்றும் நடைமுறை ரீதியானதுமான தீர்வுகளை அமைச்சரவைக்குப் பரிந்துரைப்பதற்காக வாழ்க்கைச் செலவு  தொடர்பான அமைச்சரவை உபகுழுவை மீளமைப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
    அதற்கமைய, வாழ்க்கைச் செலவு தொடர்பான உபகுழு பின்வருமாறு அமையும்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ (தலைவர்)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெனாண்டோ

அதேபோல், மேற்குறிப்பிட்ட வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் மற்றும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களின் தலைமையில் உணவுப் பாதுகாப்புக் குழுவை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  1. நாட்டில் தற்போது நிலவுகின்ற பல்வேறுபட்ட கைத்தொழில்களுக்குப் பயன்படுத்தப்படும் அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்துப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கான மாற்றுப் படிமுறைகள்
    சீமெந்து/வோட்டர் ஜெல்/ எமல்ஷன் உற்பத்திகள் மற்றும் கருங்கல் உடைத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக  பயன்படுத்தப்படும் அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்து இறக்குமதி செய்தல்/ களஞ்சியப்படுத்தல் மற்றும் பகிர்ந்தளித்தலின் ஏகபோக உரிமை மட்டுப்படுத்தப்பட்ட அரச வியாபார (பொதுக்) கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
    நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை மற்றும் குறித்த வெடிமருந்தின் நீண்டகால விநியோகத்தரான அரச வியாபாரக் (பொது) கூட்டுத்தாபனத்திற்கு விநியோகிப்பதற்கு இயலாமல் போனமையால் தற்போது நாட்டில் அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
    அதனால், குறித்த வெடிமருந்தைப் பயன்படுத்தப்படும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பிரச்சினைக்குத் தீர்வாக குறுகிய காலத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் கீழ் துரிதமாக நாட்டுக்கு அமோனியம் நைத்திரேற்று வெடிமருந்தை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  2. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்தோனிசிய குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உத்தேச ஒப்புதல் ஆவணத்தில் (Letter of Intent) கையொப்பமிடல்
    இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்தோனேசிய குடியரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்புப் பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதுதொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்காக இரண்டு நாடுகளுக்கிடையிலான உத்தேச ஒப்புதல் ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு இந்தோனேசிய அரசால் முன்மொழியப்பட்டுள்ளதுடன், தயாரிக்கப்பட்டுள்ள மாதிரி உத்தேச ஒப்புதல் ஆவணத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த உத்தேச ஒப்புதல் ஆவணத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக தங்கிய ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  3. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான குற்றவாளியை மீள ஒப்படைத்தல் ஒப்பந்தம்
    குற்றவாளிகளை மீள ஒப்படைத்தலில் நீதிமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் 2014 ஆம் ஆண்டு குற்றவாளிகளை மீள ஒப்படைத்தல் ஒப்பந்தமொன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.
    குறித்த மீள ஒப்படைத்தல் ஒப்பந்தத்தின் 5(1) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் இரண்டு நாடுகளின் நீதிமுறைமைக்குப் பொருத்தமான வகையில் மீண்டும் திருத்தங்களை மேற்கொண்டு, குறித்த மீள் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தை ஏற்று அங்கீகரிப்பதற்கும், பின்னர் 1978 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க மீள ஒப்படைத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக தங்கிய ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  4. மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவி நிகழ்ச்சித்திட்டம்
    அரச துறையின் நிறைவேற்று வகுதியிலான அலுவலர்களுக்கு ஜப்பானில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டப்பின் படிப்புப் பாடநெறியைப் பயில்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக ஜப்பான் அரசாங்கம் மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான உதவி நிகழ்ச்சித்திட்டம் 2010 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
    குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதுவரை 195 பட்டப்பின் படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் மற்றும் 10 கலாநிதிப் பட்டத்திற்கான வாய்ப்புக்களும் கிடைத்துள்ளன. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டில் 282 மில்லியன் ஜப்பான் யென் (கிட்டத்தட்ட 761 மில்லியன் ரூபாய்கள்) வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பரிமாற்று ஆவணத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  5. ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் பணிப்பாளர் அவர்களின் ஒத்துழைப்புக்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் பிரிவுக்கான அலுவலகமொன்றை தாபித்தல்
    ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் பணிப்பாளர் சபை வதிவிடமற்ற பணிப்பாளர்களைக் கொண்டமைந்துள்ளதுடன், குறித்த பணிப்பாளர்கள் ஒரு அரசோ அல்லது அதற்கு மேற்பட்ட அரசுகளுடன் கூடிய 12 பிரதிநிதிகள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
    இவ்வங்கியின் ஆரம்பகால அங்கத்தவரான இலங்கையானது, வங்கியின் 11 ஆவது பிரிவைப் பிரதிநிதித்துவம் வகிக்கின்றது. இந்தோனேசியா குறித்த பிரிவின் பிரதான பங்குதாரராவதுடன், இலங்கை, கம்போடியா, மியன்மார், லாவோசியா மற்றும் கிழக்குத் தீமோர் ஏனைய அங்கத்துவ நாடுகளாகும். அவ் அரசுகளுக்கிடையில் 2016 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய குறித்த பிரிவுக்குரிய பணிப்பாளர் பதவி மற்றும் மாற்றுப் பணிப்பாளர் பதவி சுழற்சி முறையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது.
    அதற்கமைய, 2022-2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரிவுக்கான தலைமைத்துவம் மற்றும் பணிப்பாளர் பதவியை வகிப்பதற்கு இலங்கைக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதுடன், அதற்காக திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஒருவர் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
    இலங்கைக்கு குறித்த பதவி தற்போதைய நிலைமையில் கிடைத்துள்ளமை முக்கியமாக அமைவதுடன், குறித்த வங்கியின் பணிப்பாளர் சபை வதிவிடமற்ற பணிப்பாளர் சபையாக செயற்படுகின்றமையால், பணிப்பாளர் சபை மட்டத்திலான பணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டியுள்ளது. அதற்கமைய, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியின் பிரிவுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  6. விமான விபத்துக்களுக்குள்ளாகிய நபர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை நினைவு கூரும் சர்வதேச தினம் – இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை
    சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைப்பின் ஆளுகை சபையால் அதன் 224 ஆவது கூட்டத்தொடரின் 5 ஆவது கூட்டத்தின் போது ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி விமான விபத்துக்களுக்குள்ளாகிய நபர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை நினைவு கூரும் சர்வதேச தினமாக பெயரிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
    அதற்கமைய, அத்தீர்மானத்திற்கு இணங்கியொழுகி இலங்கையிலும் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 20 ஆம் திகதி விமான விபத்துக்களுக்குள்ளாகிய நபர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை நினைவு கூரும் சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்துவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  7. சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயக பணியகத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் விவசாயப் பயிர்ச் செய்கை வேலைத்திட்டம்
    சிறைச்சாலைக் கைதிகளை சிறைக்கூடத்தில் தடுத்து வைத்திருக்கும் முறைக்குப் பதிலாக அவர்களை நாட்டின் மனிதவளமாக கருதுவதன் மூலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் உழைப்பை நாட்டின் விவசாய அபிவிருத்தி ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் ‘செழிப்பான – சிறைக்கூடத்திலிருந்து பயிர்நிலத்திற்கு’ எனும் பெயரிலான விவசாயப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
    விவசாயத் திணைக்களத்தின் ஆலோசனையின் கீழ் திறந்த சிறைச்சாலை முகாம்கள் மற்றும் வேலை முகாம்களில் உயர்ந்தபட்ச விளைச்சலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய விவசாயப் பயிரிடலை மேற்கொள்ளவும், அதன் மூலம் கிடைக்கின்ற விளைச்சலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் இவ்வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.  
    மேலும், போதைப்பொருட்களின் பாவனைக்கு அடிமைப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக பணியகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 03 புனர்வாழ்வு நிலையங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பணிகளை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் கந்தகாடு மற்றும் நவசேனபுர பிரதேசங்களில் மகாவலி அதிகாரசபை மற்றும் தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான பயிரிடப்படாத 1,000 ஏக்கர் காணிகளைப் பெற்றுக் கொண்டு அவற்றில் 500 ஏக்கர் காணியில் சோளப் பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய காணியில் அப்பிரதேசத்திற்குப் பொருத்தமான தானியங்கள், மரக்கறி மற்றும் பழவகைகளை புனர்வாழ்வளிப்பவர்களின் உழைப்பைப் பயன்படுத்தி பயிரிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.

  1. இலங்கை சீட்டாட்டத் தொழில் (Casino Business) சட்டத்தை முறைமைப்படுத்தல்
    2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின் மூலம் இலங்கையில் சீட்டாட்டத் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இலங்கையில் சீட்டாட்டத் தொழிலை மேற்கொண்டு செல்வதற்காக உரிமங்கள் வழங்கப்பட வேண்டியிருப்பினும், குறித்த சட்டத்தின் ஒழுங்கேற்பாடுகளை வலுவாக்கம் செய்வதற்கான கட்டளைகள் இதுவரை பிறப்பிக்கப்படாமையால், இதுவரை எந்தவொரு சீட்டாட்டத் தொழிலுக்கு குறித்த சட்டத்தின் கீழ் உரிமங்கள் வழங்கப்படவில்லை.
    இந்நிலைமையின் கீழ் தற்போது சீட்டாட்டத் தொழிலை மேற்கொண்டு செல்கின்ற நிறுவனங்களிடமிருந்து முறையான வகையில் குறித்த வரி அறவீடுகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. அதனால், அவ்வாறான வியாபாரங்களை  ஒழுங்குபடுத்துவதற்கு மற்றும் அரசால் அறவிடப்பட வேண்டிய குறித்த வரியை அறவிடும் நோக்கில் 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் கட்டளைகளை விதிப்பதற்கும், 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவுச் சட்டத்தின் கீழ் பொருத்தமான திருத்தங்களை அறிமுகஞ் செய்வதற்கும் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  2. 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தை திருத்தம் செய்தல்
    இலங்கை பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியாக கடப்பாடுகளைக் கொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கான வலுவாக்கத்தை வழங்கவும், கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்களின் முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் தற்போது நடைமுறையிலுள்ள கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டம் திருத்தப்பட வேண்டுமென அடையாளங் காணப்பட்டுள்ளது.
    அதற்கமைய, சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  3. குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவைக்கான திருத்தம் (101 ஆம் அத்தியாயம்) (LXVI ஆம் அத்தியாயத்தை இரத்துச் செய்தல்)
    சிறு உரித்து நீதிமன்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை முறைக்கான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தி வேறானதொரு சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் மற்றும் சிறு உரித்து நீதிமன்றங்களை தாபிப்பதற்கும் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை ஏற்பாட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களைக் கருத்தில் கொண்டு, சிறு உரித்து நீதிமன்றங்கள் தொடர்பான நடவடிக்கைமுறை ஏற்பாடுகள் உள்ளடங்கிய குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின் LXVIஆம் அத்தியாயத்தை இரத்துச் செய்வதற்காக 2021 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா  அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  4. சிறு உரித்து நீதிமன்ற நடவடிக்கைமுறை சட்டம்
    சிறு உரித்து நீதிமன்றத்திற்காக வேறானதொரு சிறப்பு நடவடிக்கைமுறை சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2021 யூன் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்ட மா  அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
    குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  5. நீதித்துறை ஏற்பாட்டு (திருத்தச்) சட்டமூலம்
    சிறு உரித்து நீதிமன்றத்திற்காக சிறப்பு நடவடிக்கைமுறையை அறிமுகப்படுத்தி வேறானதொரு சட்டத்துடன் கூடிய குறித்த நீதிமன்றத்தை தாபிப்பதற்காக 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை ஏற்பாட்டுச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2021 யூன் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா  அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  6. 1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மாகாணங்களின் மேல்நீதிமன்றங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்
    ‘சிறு உரித்து நீதிமன்றம்’ எனும் வாசகத்தை உட்சேர்த்து 1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மாகாணங்களின் மேல்நீதிமன்றங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 5(அ) உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக 2021 செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
    16.  2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
    வெளிநாட்டு செலாவணி வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரித்தமையாலும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பொதுவான வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்த முடியாது போயுள்ளமை, விவசாயம், போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி மக்களுடைய வாழ்வு மோசமான விரக்திநிலையை அடைந்துள்ளது.
    இந்நிலைமையின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவை சமர்ப்பிப்பதற்காக 2022 ஜூன் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
    அத்துடன், பொருளாதார உறுதிப்பாட்டுக்காக வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வரி மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அய்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய குறித்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்கான 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு மதிப்பீட்டை திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
    குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  7. நெல் விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள செலுத்தப்படாத விவசாயக் கடனை தள்ளுபடி செய்தல்
    2 ஹெக்டயர் (சுமார் 5 ஏக்கர்) அல்லது அதற்கு குறைந்த ஹெக்டயர் நெற் செய்கைக்காக, அரச வங்கிகளில் பெற்றுக் கொண்டு திரும்பி செலுத்தாத விவசாய கடனை இரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
    உயிர்த்த ஞாயிறு தாக்குதல், பின்னர் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மேலும் மோசமடைந்து வருவதுடன், பொதுவாக அனைத்து துறைகள் மீதும் நேரடியானதும் மறைமுகமானதுமான தாக்கங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.
    இந்நிலைமை ஒட்டுமொத்த சனத்தொகையில் 30% வீதத்தினராகிய விவசாயிகளால் இதனை தாங்கிக் கொள்வதற்கு சிரமமாக இருப்பதுடன், இரசாயன உரப் பாவனைக்குப் பதிலாக இயற்கை உரப் பாவனையை அறிமுகப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால் விவசாயிகள் மேலும் பல சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
    இந்நிலைமையின் கீழ் நெற்பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளால் பெறப்பட்டுள்ள கடன்தொகையை மீளச் செலுத்துவதற்கு இயலாமல் போயுள்ளதுடன், குறித்த கடன்களை அறவிடமுடியாக் கடனாக வங்கிகள் வகைப்படுத்தியுள்ளன.
    எனவே, எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான கடன்தொகையைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகமான விவசாயிகள் தகைமையற்றவர்களாவதற்கு வாய்ப்புள்ளமையால், அரச தலையீட்டில் அவர்களுக்கு சலுகைகளை வழங்குவது அத்தியாவசியமாகவுள்ளது.
    அதற்கமைய, இரண்டு ஹெக்டயர் அல்லது அதற்குக் குறைவான காணியில் நெற்செய்கைக்காக அரச வங்கியிலிருந்து கடன் பெறப்பட்டு தற்போது மீளச் செலுத்துவதற்கு இயலாமல் போயுள்ள ஆரம்பக் கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments