Saturday, 3 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஅனுரகுமாரவிடம் நல்ல திட்டம் இருக்குமாக இருந்தால் நான் இராஜினாமா செய்ய தயார் : பிரதமர் ரணில்

அனுரகுமாரவிடம் நல்ல திட்டம் இருக்குமாக இருந்தால் நான் இராஜினாமா செய்ய தயார் : பிரதமர் ரணில்

ஆட்சியை தங்களிடம் வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்கு கொண்டுவருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், அது சாத்தியமில்லைாத விடயமாகும், அவ்வாறு அவரிடம் ஏதேனும் ஒரு திட்டம் இருக்குமானால், அதை தான் வரவேற்பதாகவும், ஜனாதிபதியிடம் அந்த திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஜேவிபி தலைவரின் திட்டத்தின் படி, ஆறு மாதங்களில் நாட்டை கட்டி எழுப்ப முடியுமாக இருந்தால், அவருக்கு பொருளாதார ரீதியில் நோபல் பரிசு வழங்க வேண்டும்.
அனுர குமாரவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால், பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு தான் தயார் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
நான் பதவியில் இருந்து ராஜினாமா செய்து அனுப்புமாறு திசாநாயக்க வை பிரதமராக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் “GO HOME GOTA” என்று எதிர்க்கட்சியினர் சபையினுள் கோஷம் எழுப்ப தொடங்கினர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments