** ஓமானிலிருந்து புறப்பட்ட கப்பல் 08 ஆம் திகதி இலங்கை வரும்
ஓமானிலிருந்து
யூரியாவுடன் வரும் கப்பல், எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை வந்தடையும் என்று விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடன் உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா இந்த யூரியாவை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
உடனடியாக நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் இந்த உரம்,10,000 ரூபாய் மானிய அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
யூரியா மூடை ஒன்று சந்தையில் 42 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த நிலையில் விவசாயிகளின் நிலையும் நாட்டு நிலையையும் கருத்தில் கொண்டு நாம் மானிய அடிப்படையிலேயே இந்த உரத்தை வழங்குகின்றோம் என்றும் அமைச்சர் மஹிந்த அமர வீர தெரிவித்தார்.
இந்த உரத்தின் தரம் இந்திய நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டு தரமானதென சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
முதலாவது தொகுதி 40,000 மெட்ரிக் தொன் யூரியாவை ஏற்றிக்கொண்டு கப்பல் வந்து கொண்டிருக்கிறது. இதில் 10,000 மெ. தொ உரம் சோளன் செய்கை யாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.