Friday, 19 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமைத்திரி -சஜித் சந்திப்பு: விக்னேஸ்வரன் , திகாம்பரமும் பங்கேற்பு

மைத்திரி -சஜித் சந்திப்பு: விக்னேஸ்வரன் , திகாம்பரமும் பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதியின் மைத்திரிபால சரி செய்யவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவம் இன்று நேரடியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.


எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில்,இருவரும் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியதோடு, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்பு உறுப்பினர்கள் மத்தியிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.


பேச்சுவார்த்தைகள் மிகவும் ஆரோக்கியமாகவும் சமூகமாகவும் நடந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்தச் சந்திப்பில், பி விக்னேஸ்வரன் எம்பி,
பி.திகாம்பரம் எம் பி, முக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்ம பண்டார, ராஜித சேனாரத்ன எம்பி ஆகியோர் கட்சித் தலைவர்கள் என்ற ரீதியில் கலந்து கொண்டார்கள்.


அதே நேரம், ஊடகவியலாளர்களான விக்டர் ஐவன், ஜனரஞ்சன, பேராசிரியர் காமினி உயங்கொட மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலின் போது கலந்து கொண்டனர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments