Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

** அரசாங்கம் தோல்வி அடைந்து விட்டதாக சாகர காரிய வசம் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம் பெறுகின்றது.
இந்த சந்திப்பு மிகவும் காரசாரமான வாத பிரதிவாதங்களோடு இடம் பெறலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.


பிரதமர் ரனில் விக்ரம் சிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். அரசாங்கத்தின் தற்போதைய போக்கு நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும். இதனால்,ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்த போவதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பரபரப்பான நிலையில் தான் ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று இடம்பெறுகிறது.


பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதை தவிர்த்து, மாற்று திட்டங்கள் ஏதும் பிரதமரிடம் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயல்படுத்தினால் நடுத்தர மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். நாணய நிதியத்தின் சாதகத்தை பற்றி கூறுபவர்கள் அதன் பாதகத்தையும் யோசிக்க வேண்டும் என்றும் சாகர காரியவசம் சுட்டி காட்டி உள்ளார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments