Tuesday, 16 August, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுபுதிதாக 100 பாடசாலை சேவை பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்

புதிதாக 100 பாடசாலை சேவை பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டம்

நாட்டின் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி நூறு பாடசாலை பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் இதனை கூறினார்.


இந்த பஸ்களில் பணியாற்றுவதற்காக பெண் நடத்துனர்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஆரம்ப திட்ட நகலாகவே இது இருக்கின்றது. அமைச்சரவையில் இது அங்கீகரிக்கப்பட்டதன் பின்பு,முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


இதேபோல, இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்தியாவில் இருந்து 500 பஸ்களை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டு இருக்கிறது. இடைக்கால வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு இதனை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments