பிரபல சிங்கள நடிகர் ஜெக்சன் எண்டனி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பயணித்த கெப் வாகனம் தலாவ பிரதேசத்தில் காட்டு யானை உடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.