Friday, 9 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுகொழும்பில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடப்படும் நிலை: வெளிவிவகார அமைச்சில் அதிருப்தி

கொழும்பில் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் மூடப்படும் நிலை: வெளிவிவகார அமைச்சில் அதிருப்தி

கடுமையான எரிபொருள் நெருக்கடியினால் கொழும்பில் உள்ள மேற்கு ஐரோப்பிய நாடு ஒன்று தனது தூதரக செயல்பாடுகளை நிறுத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை,கொழும்பில் உள்ள மேலும் சில தூதரகங்கள், தங்களது கன்சுயூலர் சேவைகளை குறைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகை இதனை பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடு ஒன்றின் தூதரக உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, ” தூதரகங்களின் செயல்பாடுகளை உறுதிப்படுத்தும் சர்வதேச சட்டத்தை இலங்கை வெளி விவகார அமைச்சு தவறி உள்ளது. ” என அவர் கூறியதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடு ஒன்றின் சிரேஷ்ட இராஜதந்திரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, ” எரிபொருள் இல்லாமல் தற்போது தூதரகங்கள் செயல்படுகின்றன. எங்களிடம் இருக்கின்ற எரிபொருள் இன்னும் ஒரு வாரத்துக்கே போதுமானது. அதன் பின்பு நாங்கள் தூதரகத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.” என்றார்.
ஐரோப்பிய யூனியனும் அதனோடு இணைந்த நாடுகளும், இந்த விடயத்தை வெளி விவகார அமைச்சுக்கு உத்தியோபூர்வமாக கவனத்திற்கு கொண்டு வர இருக்கிறோம்.
இராஜதந்திர தூதரகங்களை முறையாக பேணாமல் விடுவது, வியன்னா ( Vianna ) பிரகடனத்தை மீறும் செயல் என்றும் இந்த இராஜதந்திரி தெரிவித்துள்ளதாக சண்டை டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments