(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இருவெவ்வேறு சம்பவங்களில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (1) இரவு 16 கிராம் 320 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்துள்ளதாக வாழை ச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிக்கு அமைய சம்பவதினமான நேற்று இரவு காவத்துமுனை பிரதேசத்தில் குறித்த வியாபாரியை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் இவரிடமிருந்து 5 கிராம் 320 மில்லிக்கிராம் ஹெரோயினை மீட்டதுடன் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே போதை பொருள்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வந்த நிலையில் நீதிமன்றில் ஆஜராகாமல் மறைந்துள்ளதையடுத்து இவருக்கு 6 நீதிமன்ற பிடிவிறாந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நேற்று வாழைச்சேனை 4ம் பிரிவிலுள்ள பகுதியில் வைத்து போதைப் பொருள் வியாபாரியை 11 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.